உளப்பகுப்புக் கோட்பாடு;சிக்மண்ட் பிராய்ட் (உளவியல்)

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freudசிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்ததும், இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவற்றின் தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.

கண்டுபிடிப்பு

சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.
சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,
  1. உணர்வு மனம் (Conscious Mind)
  2. உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
  3. தொலை நோக்கு மனம்
கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் அதிகம் உண்டு என்று இவர் கண்டறிந்து கூறியதாலும் இவர் புகழ்பெற்றார். மேலும் மானிடரின் குண இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார். அவை,
  1. உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
  2. முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
  3. மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.

உளப்பகுப்பாய்வின் வளர்ச்சி

1885 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிக்மண்ட் பிராய்டு இப்னாசிஸ் விஞ்ஞான ஆராய்ச்சியை நடத்திய புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான ஜீன்-மார்டின் சார்கோட் உடன் படிப்பதற்காக பாரிசுக்கு சென்றார். அவர் பிறிதொரு சமயம் இந்த அனுபவத்தை, மருத்துவ உளவியல் சிகிச்சையை நடைமுறையில் பயன்படுத்தவும், நரம்பியல் ஆராய்ச்சியில் குறைவான நிதியில் தொழிலில் உறுதியான ஒரு எதிர்காலத்தைப் பெறுவதற்கும் விடாமுயற்சி மேற்கொள்ள என்னைத் துாண்டிய தருணம் என நினைவுகூர்கிறார்.[2] சார்கோட் உளக்கூறு நோயாளிகளிடம் காணப்படும் விகாரமான உடல் வெளிப்பாடு (இஸ்டீரியா) பற்றிய ஆய்வு மற்றும் அறிதுயில் நிலையை ஏற்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார், இது அவர் பார்வையாளர்களின் முன்னால் மேடையில் அடிக்கடி நோயாளிகளுடன் நடத்திய செயல்முறை விளக்கங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.
1886 ஆம் ஆண்டில் தனது மருத்துவமனையில் அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தம் முறையை பயன்படுத்தத் தொடங்கினார். அவர் தனது நண்பர் மற்றும் கூட்டுப்பணியாளரான ஜோசப் புருவரின் அணுகுமுறையைப் பயன்படுத்தினார். அவர் ஹிப்னாஸிஸ் பயன்பாடு பற்றி தான் அறிந்திருந்த பிரஞ்சு முறைகளில் இருந்து வேறுபட்டார். பிரஞ்சு அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தும் முறைகளில் ஆலோசனை கூறுதல் நடைமுறைியல் இல்லை. புருவரின் ஒரு குறிப்பிட்ட நோயாளியின் சிகிச்சை பிராய்டின் மருத்துவ நடைமுறைக்கு மாற்றாக நிரூபிக்கப்பட்டது. அன்னா ஓ. எனக் குறிப்பிடப்பட்டவர் அறிதுயில் நிலையில் உள்ள போது தனது நோய்க்குறிகளைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். (தனக்கான சிகிச்சை முறையை "பேசுதல் மூலம் குணப்படுத்துதல்" என்ற சொல்லாக்கத்தை உருவாக்கினார்). இந்த முறையின் படி பேசும் போது நோய்க்குறிகள் தீவிரத்தன்மையிலிருந்து குறைய ஆரம்பித்தது. மேலும், அதிர்ச்சிகரமான சம்பவங்களோடு தொடர்புடைய நினைவுகளையெல்லாம் மீட்டுக்கொணரப்பட்டது. பிராய்டின் மருத்துவப் பரிசோதனைகள் அறிதுயில் நிலை சிகிச்சையுடன் ஒப்பிடும் போது, நோயாளியை எந்தவிதமான தணிக்கையோ, தடுப்போ இல்லாமல், தனது நினைவில் தோன்றக்கூடிய எண்ணங்களைப் பற்றியெல்லாம் சுதந்திரமாகப் பேசுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் நோய்க்குறிகளில் இருந்து மேம்பட்ட நிவாரணம் கிடைக்கிறது என்ற முடிவிற்கு அழைத்துச் சென்றன எனலாம். இந்த செயல்முறையோடு, பிராய்டினால் "கட்டற்ற இணைப்பு" என்று அழைக்கப்படும் நோயாளிகளின் கனவுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, அவற்றிலிருந்து நனவிலி மனத்தின் சிக்கலான கட்டமைப்பை பகுப்பாய்வு செய்ய இயலும் முறையொன்றையும் இணைத்துப் பயன்படுத்தினார். அவர் மனித மனத்தின் உளவியல் செயல்பாடான அடக்குமுறை நோய்க்குறிகளை உருவாக்குவதற்கான அடிப்படையான காரணமாகக்கூட இருக்கலாம் என்பதையும் விளக்கினார். 1896 ஆம் ஆண்டில், “அறிதுயில் நிலை“ என்பதை பிராய்டு கைவிட்டார். மேலும், தனது 1896 ஆம் ஆண்டில், அறிதுயில் நிலை என்பதை பிராய்டு கைவிட்டார். மேலும், தனது புதிய மருத்துவ முறை மற்றும் அதற்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளை குறிக்க "உளப்பகுப்பாய்வு" என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.[3] 1896 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்தோடு அவர் தொடர்பு படுத்திய நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாக இதயத்தில் ஒழுங்கற்ற தன்மை, மனச்சோர்வு மற்றும் தொல்லையளிக்கும் கனவுகள் ஆகியவற்றை அனுபவித்த காலகட்டத்தில் பிராய்டிடம் இந்த புதிய கருத்தியலானது உருவாகத் தொடங்கியது.[4] மேலும் அவர் தனது கனவுகள் மற்றும் குழந்தைப் பருவ நினைவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுய பகுப்பாய்வை துாண்டி விட்டார். தனது தாயார், தந்தையிடம் காட்டிய அன்பே அவர் தந்தையின் மீது ஒரு விரோத மனப்பான்மையுடன் கூடிய பொறாமை மற்றும் பகைமை போன்ற அவரது உணர்வுளுக்கான காரணம் என்பதைக் கண்டறிய இந்த சுயபகுப்பாய்வு உதவியது. இந்தப் புரிதல் மேலோட்டமான உள நோய்களுக்கான மூலம் எது என்பது பற்றிய தனது அடிப்படைக் கொள்கைகளை மாற்றியமைக்க உதவியது.பிராய்டின் ஆரம்ப கால மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் நனவிலி மனத்தின் நினைவுகளில் இருந்த தொடக்க கால குழந்தைப் பருவத்து பாலியல் தொல்லைகள் உளவழி நரம்பு நோயின் (psychoneuroses) (உளக்கூறு நோயாளிகளிடம் காணப்படும் விகாரமான உடல் வெளிப்பாடு (hysteria) மற்றும் பித்து நரம்பியல் (obsessional neurosis)) முன் நிபந்தனையாக இருக்கலாம் என்று தனது தவறிழைக்கத் துாண்டப்படுதல் சார்ந்த கொள்கையின் (Freud's seduction theory) கோட்பாடாக முன்வைத்தார்.[5] அவரது சுய பகுப்பாய்வின் விளைவான தெளிவில் பிராய்டு ஒவ்வொரு உளவழி நரம்பு நோயின் காரணத்தையும் தேடி பின் சென்றால் குழந்தைப் பருவத்தில் பாலியல்ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டமை காரணமாக இருக்கும் என்ற கருத்தை கைவிட்டார். இப்பொழுதும் கூட குழந்தைப் பருவ பாலியல் அத்துமீறல்கள் உளப்பிறழ்ச்சி நோய்க்கான காரணங்களில் ஒன்றாக இருந்தாலும் அவை உண்மையானவையா? கற்பனையாக உருவாக்கப்பட்டவையா என்பது அவை அடக்கப்பட்ட அல்லது அழுத்தப்பட்ட நினைவுகளாக மாறியுள்ளனவா? என்பதைப் பொறுத்தே நோய் விளைவிக்கின்ற காரணியா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்ய இயலும் என்ற கருத்துக்கு வந்தார்.[6] அனைத்து உளப்பிறழ்ச்சி நரம்பியல் நோய்களுக்கும் மூலமாக குழந்தைப் பருவத்து அதிர்ச்சி தரக்கூடிய பாலியல் அத்துமீறல்கள் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தியலிலிருந்து தன்னிச்சையான குழந்தைப் பருவ பாலியல் கருத்தறிவு இருப்பதாகக் கருதப்படும் கருத்தியல் நிலைக்கான மாற்றமானது பிராய்டின் ஈடிபசு சிக்கல் (மகன் தாயின் மீது கொள்ளும் ஒரு வித பாலியல் மோகம்) தொடர்பான புதிய கருத்தியல் உருவாக அடிப்படையாக இருந்தது.[7]
சிக்மண்ட் பிராய்ட்
Sigmund Freud LIFE.jpg
சிக்மண்ட் பிராய்டின் நிழற்படம், 1938
பிறப்புமே 61856
பிரீபர்க்மோரேவியா, இப்போது செக் குடியரசில்
இறப்புசெப்டம்பர் 23, 1939 (அகவை 83)
இலண்டன்
வாழிடம்ஆஸ்திரியா, (பின்னர்) இங்கிலாந்து
தேசியம்ஆஸ்திரியர்
துறைநரம்பியல்மெய்யியல்உளமருத்துவம்உளவியல்உளப்பிணிச் சிகிச்சைஉளப்பகுப்பாய்வு
பணியிடங்கள்வியன்னாப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னாப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஜான்-மார்ட்டின் சார்க்காட், (பின்னர்) ஜோசேப் புரூவர்
முனைவர் பட்ட
மாணவர்கள்
ஆல்பிரட் ஆட்லர்ஜான் பவுல்பிவிக்டர் பிராங்க்அன்னா பிராய்ட்ஏர்னஸ்ட் ஜான்ஸ்கார்ல் ஜங்மெலனி கிளீன்ஜாக் லாக்கான்பிரிட்ஸ் பேர்ள்ஸ்ஒட்டோ ராங்க்வில்ஹெல்ம் ரீச்
அறியப்படுவதுஉளப்பகுப்பாய்வு
விருதுகள்கேத் 

பரிசு

Comments